வேதாரண்யம் தாலுக்காவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஐந்தாயிரம் விவசாய குடும்பத்தினர் இதை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் 42 ஆயிரத்திற்கு விலை போனது. தற்போது ஒரு டன் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை மட்டும் விற்பனை ஆகிறது. இதனால் தேங்காய் பறிப்பதற்கும் உரிப்பதற்குமான கூலிக்கே விலை சரியாக இருப்பதாகவும், அதிக அளவில் இழப்பை சந்தித்திருப்பதாகவும் தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.