தமிழ்நாடு

தூர்வாரப்படாத பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் : தரைதட்டி கவிழ்ந்த விசைப்படகு முற்றிலும் சேதம்

சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

தந்தி டிவி
சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித்து விட்டு திரும்பிய சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு முகத்துவாரத்தில் தரைதட்டி கவிழ்ந்தது. இதையடுத்து சாமிநாதன் உள்ளிட்ட 4 மீனவர்கள் படகில் இருந்து கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து பழையாறு மீனவர்கள் 6 விசை படகுகளில் விரைந்து சென்று சாமிநாதன் படகை கயிறு கட்டி 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்டு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான விசை படகு முற்றிலும் சேதமடைந்தது. எனவே பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரவும் பாதிக்கபட்ட படகை சீரமைக்க நிவாரணம் வழங்கவும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு