நாகையில் போதையில் வந்த ஒருவர் காவலரை பணி செய்ய விடாமல் அலப்பறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார், சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போதையில் இருந்த அந்த நபரை பிடித்த காவலர் விசாரித்துள்ளார். ஆனால் அவரோ போலீசாரை ஒருமையில் திட்டியுள்ளார். பின்னர் அவரை தங்கள் பாணியில் போலீசார் கவனித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வெளிப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.