கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், அவசரம் அவசரமாக கரை திரும்பி வருகின்றனர். புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பால், நாகப்பட்டினம் முகத்துவாரத்தில் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது.