தமிழ்நாடு

ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு...

விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் உள்ள வீரமூர் ஏரியில் மண் அள்ளுவதற்காக கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், பிரகாஷ், ஏழுமலை மற்றும் சுப்ரமணி ஆகியோர் மாட்டு வண்டிகளில் சென்றுள்ளனர். அப்போது அங்கே காரில் வந்த மர்மநபர்கள் அவர்கள் 5 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகே இருந்த கரும்பு காட்டுக்குள் நுழைந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாட்டின் நாக்கு துண்டான நிலையில் மற்ற மாடுகள் காயம் அடைந்தன. இதனையடுத்து துப்பாக்கியால் சுட்டவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் பொதுமக்கள் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடத்தியவர்களிடம் செஞ்சி காவல்துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்