தமிழ்நாடு

Salem | Robbery | சாவகாசமாக கொள்ளையடித்து விட்டு லிப்ட் கேட்டு தப்பிய மர்ம நபர்

சாவகாசமாக கொள்ளையடித்து விட்டு லிப்ட் கேட்டு தப்பிய மர்ம நபர்

thanthitv

Salem | Robbery | சாவகாசமாக கொள்ளையடித்து விட்டு லிப்ட் கேட்டு தப்பிய மர்ம நபர்

பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை - லிப்ட் கேட்டு தப்பிய மர்ம நபர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பைனான்ஸ் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய நபர் லிப்ட் கேட்டு தப்பியச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலச்சம்பாளையம் பாறைக்காடு மேடு பகுதியில் கதிரவன் என்பவர் நடத்தி வரும் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். கொள்ளையடித்த பணத்துடன் வெளியே வந்த அந்த நபர், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு தப்பிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Omni Bus | அரசு எச்சரித்த பின்னும் மேலும் டிக்கெட்டை ஏற்றிய ஆம்னி பஸ்கள்

Chennai Police | ரவுடிகளை குறிவைத்து தூக்கிய போலீஸ் | ஸ்பெஷல் டிரைவ்-ல் 185 ரவுடிகள் அதிரடி கைது

By Election | DMK | இடைத்தேர்தல் வேலை ஆரம்பம்.. நியமனம் செய்த திமுக

CM Vijay In London| சரியாக 11.40-க்கு லண்டனில் தரையிறங்கிய CM விஜய்.. ஏர்போர்ட்டே குலுங்க கூட்டம்

Leave | Vinayagar Chaturthi| 3 நாட்கள் தொடர் விடுமுறையால் விழுந்த பேரிடி