கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டவுன் ரயில் நிலையம் அருகே சென்ற, வந்தே பாரத் ரயில் மீது மர்ம நம்பர்கள் கற்களை வீசியதில், ரயிலின் ஏழு கண்ணாடிகள் உடைந்தது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் ரயிலில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சித்தலூர் பகுதியைச் சேர்ந்த, 4 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.