சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சிவக்குமார் அடையாளம் தெரியாத 8 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது சித்தி மகள் லட்சுமியின் பிறந்தநாளை கொண்டாட சிவகுமார் சென்றிருந்த போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தாதாவான சிவகுமாருக்கும், கொலை செய்யப்பட்ட சிவகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரவுடி சிவக்குமார் கொலை தொடர்பாக அவருடைய சித்தி மகள் லட்சுமி உட்பட 3 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.