தமிழ்நாடு

தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னையிலும் உள்ள சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னையிலும் உள்ள சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயந்திவிழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி மற்றும் 57 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, பென்ஜமின் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு