தமிழ்நாடு

Muthuramalinga Thevar | முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசிய மனுதாரர் - குட்டு வைத்து அனுப்பிய நீதிபதி

முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசிய மனுதாரர் - குட்டு வைத்து அனுப்பிய நீதிபதி

thanthitv

முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசிய மனுதாரரை கண்டித்த ஐகோர்ட் உலகப் போர் முடியும் வரை போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உலக அமைதியை வலியுறுத்திப் போராட அனுமதி கோரிய மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, காலவரையற்ற போராட்டக் கோரிக்கை நிர்வாக ரீதியாகச் சாத்தியமற்றது எனத் தெரிவித்தார். மேலும், அம்பேத்கர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை நீதிமன்றத்திலேயே சாதிய தலைவர்கள் என இழிவாகப் பேசிய மனுதாரரைக் கண்டித்த நீதிபதி, குறிப்பிட்ட இடத்தில் தான் போராடுவேன் எனப் பிடிவாதம் பிடிக்க யாருக்கும் உரிமையில்லை என கூறினார். நீதிமன்ற நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை அரசுப் பள்ளிக்கு வழங்கவும், தவறினால் ஒரு நாள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்