தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா... பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு தடை.. ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தந்தி டிவி

நாளை திங்கட்கிழமை முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு அமைப்பினரும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தென்னிந்திய நேதாஜி மற்றும் தேவர் பேரவை கூட்டமைப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பசும்பொன்னுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், அந்த போஸ்டரில் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருடன் கைகோர்த்து ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் நேதாஜியையும், முத்துராமலிங்க தேவரையும் வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா? எனவும், அவர்கள் பசும்பொன்னுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டுகிறோம் எனவும் அச்சிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை