தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.