தமிழ்நாடு

நாடே கொந்தளிக்கும் போது சரியான டைமில் சரியான ஆக்‌ஷன்... ஆட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமைச் செயலாளர்

தந்தி டிவி

நாடே கொந்தளிக்கும் போது சரியான டைமில் சரியான ஆக்‌ஷன்... ஆட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமைச் செயலாளர்

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து, உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மூத்த அலுவலர்களுடன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆய்வு நடத்தினார்.

அப்போது, அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். சிசிடிவி கருவிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், அவற்றின் காட்சிப்பதிவுகளை மத்தியக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். மருத்துவமனைகளில் அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், புறக்காவல் நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்க வேண்டும் என்றும், மருத்துவனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

byelection | candidatelist | சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களத்தில் யார் யார் வெளியான ஃபைனல் லிஸ்ட்

Anna University | அண்ணா பல்கலை.யில் மேலும் ஒரு மாணவி மருத்துவமனையில் அனுமதி

Anbil Mahesh | CCB | சிக்கிய Files..? அன்பில் உதவியாளரிடம் விசாரணை..

Ramesh | Srirangam | ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார்..அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பிரஸ்மீட்

Nellai | Fight | இஸ்டாவில் சாதி ரீதியான பதிவால் உண்டான மோதல்..