புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கும் முயற்சியையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.