தமிழ்நாடு

நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...

சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தந்தி டிவி

சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதி ஓதுக்கப்பட்ட போதிலும், தெற்கு ரயில்வே அலட்சியம் காட்டி வருவதால், ரயில் நிலையங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 771 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 244 ரயில் நிலையங்களிலும், 58 ஆயிரத்து 276 ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரயில்வே வாரியம் நிதி ஒதுக்கியது. 983 ரயில் நிலையங்களில், நிர்பயா நிதி மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 136 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த பணி முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த போதிலும், மூன்று ஆண்டுகளாகியும் கேமராக்கள் பொருத்தும் பணி முடிக்கப்படவில்லை. தற்போது முக்கிய 11 ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா உள்ளதால், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. நேற்று நுங்கம்பாக்கம், இன்று சேத்துப்பட்டு , நாளை மற்றொரு ரயில் நிலையம் என பாதுகாப்பற்ற சூழல் தொடராமல் இருக்க, தெற்கு ரயில்வே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பயணிகளின் எதிர்பார்ப்பு.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு