சிறுமியை சீரழித்த கொலை வழக்கு - 68 சாட்சிகள், 221 ஆவணங்கள்.. வந்த அதிரடி தீர்ப்பு #Harassment | #Court | #ChildAbuse | #Abuse #HighCourt கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைதான கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே 21ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இருவரை போலீஸ் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வநதது. காவல்துறை தரப்பில் தீவிர புலனாய்வு மேற்கொண்டு, 68 சாட்சிகள் மற்றும் 221 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், முதல் குற்றவாளி கார்த்திக் மீது கொலை, கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளிலும், இரண்டாவது குற்றவாளி மோகன் மீது கூட்டு சதி, உடந்தையாக இருத்தல், விசாரணையை திசைதிருப்புதல் ஆகிய பிரிவுகளிலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இந்தநிலையில், இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், தண்டனை தொடர்பான இரு தரப்பு வாதங்களை கேட்பதற்காக டிசம்பர் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.