தமிழ்நாடு

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
கடந்த ஆண்டு முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த , பழமையான அணை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது.இந்நிலையில் , தற்காலிக தடுப்பணை முன் அமைக்கப்பட்டு இருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது, இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது வந்து கொண்டிருக்கும் சுமார் 9 ஆயிரம் கன அடி தண்ணீரால், மணல் தடுப்பு உடைந்துள்ளது என்றும், தற்காலிக தடுப்பணை வலுவாக உருவாக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு