தமிழ்நாடு

50 ஆண்டுகளைக் கடந்து மக்களின் ஆதரவோடு இயங்கி வரும் முதுகுளத்தூர் சந்தை

50 ஆண்டுகளைக் கடந்து மக்களின் ஆதரவோடு இயங்கி வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இயங்கி வரும் இந்த சந்தை அப்பகுதி மக்களிடையே பிரசித்தம். காரணம் வாரத்தில் ஒரு நாள் நடக்கும் இந்த சந்தைக்கு சுற்றிலும் உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் திரளாக கூடுகிறார்கள்.

50 ஆண்டுகளாக மக்கள் வெள்ளத்துடன் காட்சி தரும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் என எல்லாம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.. அன்றாட சமையலுக்கு பயன்படும் காய்கறிகள், மளிகை சாமான்களை இங்கு வந்து வாங்கிச் செல்லும் மக்கள் அதிகம்.

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு முதல் நாளே ஆயத்தப்பணிகள் தொடங்கி விடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள காக்கூர், கருமல், தேருவேலி, கீழத்தூவல் என 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த சந்தை தான் பெரிய ஆதாரமாக இருக்கிறது.

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் என எல்லாம் இந்த சந்தையில் கிடைப்பதே இங்கு மக்கள் கூட்டம் அதிகம் வர காரணம்.. கீரைகள் எப்போதும் ப்ரெஷ் ஆக கிடைக்கும் சந்தை இது. அதேபோல் குழந்தைகளை கவரும் விதவிதமான வத்தல், வடகமும் இந்த சந்தையில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடற்பகுதி சார்ந்த இடம் என்பதால் இங்கு கருவாடு விற்பனை ஜோராகவே நடக்கிறது. விதவிதமான கருவாடுகளும் அதிகம் விற்பனை ஆகும் சந்தை இது. அதேபோல் சுத்தமான கருப்பட்டி வாங்க விரும்புவோருக்கு ஏற்ற இடம் இது.

பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த சந்தை நடப்பதால் மக்கள் வந்து செல்வதும் எளிதாகவே இருக்கிறது. மற்ற கடைகளில் கிடைப்பதை விட இங்கு விலை குறைவு என்பதோடு எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் என்பதும் சிறப்பு.. இதனால் முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு ஒரு திருவிழா போல காட்சி தரும் இடமாகவே மாறியிருக்கிறது இந்த சந்தை...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி