சொத்து தகராறால் தாய் பலியானதால் சடலத்துடன் சிறுவன் போராட்டம் அரக்கோணத்தில், சொத்தை அபகரிக்க முயன்றதால் விதவைத் தாய் மன உளைச்சலில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்ற விதவை பெண்ணின் வீட்டை, மளிகை வியாபாரி ராஜ்குமார் மற்றும் அவரது தரப்பினர் ஏமாற்றிப் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உரிய பணம் தராமல், சுலோச்சனாவைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதால், மனமுடைந்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் உறவினர்கள், வியாபாரியின் கடை முன்பு சடலத்தை வைத்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய பணத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 4 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.