தமிழ்நாடு

குடும்ப தகராறால் 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்

ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி ராம்பிரியா. இவர்களுக்கு 2 வயதில் அனன்யா என்ற மகளும் ஒரு வயதில் தர்ஷனா என்ற குழந்தையும் இருந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிரச்சினை அதிகமாகவே மனம் உடைந்த ராம்பிரியா, தனது 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனது மகள் மற்றும் பேத்திகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்பிரியாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்