#Chennai #Hospital #BabyDelivery #TNPolice #ThanthiTV
Chennai | ஹாஸ்பிடல் பாத்ரூமில் குழந்தையை பெற்றெடுத்த தாய்.. குழந்தை பலி.. உடலில் காயம்.. நடந்தது என்ன? திருவொற்றியூரில், மருத்துவமனைக் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த 18 வயது திருமணமாகாத இளம்பெண், வயிற்றுப்போக்கிற்காக தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்குச் சென்றபோது கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர், குழந்தை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.