தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மகன்கள் - சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் தாய்...

ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ப்பு மகள் மீது ஆபிதா பேகம் என்பவர் கண்ணீர் மல்க புகார்.

தந்தி டிவி
சேலம் அடுத்த வீரகனூரை சேர்ந்த ஆபிதா பேகம் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன்களுக்கு சிகிச்சை அளிக்க, தனது வீட்டை விற்க முடிவு செய்த நிலையில், அவரது வளர்ப்பு மகள் தடையாக உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். மகன்களுக்கு மருத்துவ செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால், ஆபிதா தனது 40 லட்சம் மதிப்பிலான வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் வளர்ப்பு மகளான சமீனா வீட்டை விற்க கூடாது என்றும், தனது பெயரில் வீட்டை எழுதி வைக்க மிரட்டி வருவதாகவும் தெரிவித்த ஆபிதா, சமீனா மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மகன்களுடன் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்