தமிழ்நாடு

குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை

தந்தி டிவி

 ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் சேர்ந்தவர் கவின் பிரசாத் .இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் கவின் பிரசாத் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது மனைவி அமராவதி தனது ஒன்றை வைத்து ஆண் குழந்தை ஆதிரனை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ....

இதுகுறித்து கவின் பிரசாத் வீட்டின் அருகே இருந்தவர்கள் வெள்ளோடு காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளோடு காவல்துறையினர் இறந்து போன உடல்களை ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இச் சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை