புதுக்கோட்டையில் நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சுரேஷ் என்பவர் நகைக்காக தனது சொந்த சித்தி மகளான லோகப்பிரியாவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் சுரேஷ்-க்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே குற்றவாளி சுரேஷின் தாய்,
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.