காஞ்சிபுரம் மாவட்டம், பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி. சில தினங்களுக்கு முன் லோகநாயகி மற்றும் சிறுமி மித்ரா ஆகியோர் காணாமல் போய் உள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் சுந்தரமூர்த்தி , தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார், இந்நிலையில் மேல்மருவத்தூரில் அவர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்ற போலீசார், சரவணணை கைது செய்து, லோகநாயகி மற்றும் சிறுமியை மீட்டனர். லோகநாயகி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.