தமிழ்நாடு

ரயில் மோதி 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ரயில் மோதி 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

thanthitv

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரயில் மோதி 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் இருந்து மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், இலங்கியனூர் பகுதியில் விளைநிலங்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மழை காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கியதால், ஆடுகள் அருகிலிருந்த ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்திருந்தன.

அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை வழியாக மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், தண்டவாளத்தில் இருந்த ஆடுகள் மீது மோதியதில் 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

சம்பவத்திற்குப் பிறகு ஆடு மேய்ப்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்