தமிழ்நாடு

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.

இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வின் போது காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்