தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும்13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 458 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 696 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் என மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்