தமிழ்நாடு

Periyar Library | "அகல் விளக்கு பதிப்பக நிறுவனர் மோகனை.." - லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த ரெக்வஸ்ட்

"அகல் விளக்கு பதிப்பக நிறுவனர் மோகனை.." - லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த ரெக்வஸ்ட்

thanthitv

Periyar Library | Agal Vilakku | "அகல் விளக்கு பதிப்பக நிறுவனர் மோகனை.." - லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த ரெக்வஸ்ட் #periyarlibrary #agalvilakku #thanthitv நூல் முறைகேடு விவகாரம் - பதிப்பக உரிமையாளருக்கு 3 நாள் போலீஸ் காவல் பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் கைதான அகல் விளக்கு பதிப்பக உரிமையாளரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது... கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டிருந்தார்... அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்... விசாரணையின்போது, பதிப்பக உரிமையாளர் தரப்பில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது... அதேநேரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், தனிநபர்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டது..... இதையடுத்து, மோகனைத் துன்புறுத்தக் கூடாது என்றும், விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்த நீதிபதி, 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கினார்... மேலும் நாளை (நவ.30) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

MK Stalin | தொகுதி மறுவரையறை.. காங். எடுத்த முடிவு - ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் முக்கிய புள்ளி

Gem Veeramani | "ஜெம் வீரமணி வீட்டில் சிறுமியின் சடலங்கள்.." சொன்ன டிரைவர் பாலாவிற்கு போலீஸ் கஸ்டடி

Kallakurichi MLA | TVK | Arul Vignesh | கள்ளக்குறிச்சி தவெக MLA ஜாமின் மனு தாக்கல்

#BREAKING || Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில்.. தீபமேற்ற அனுமதி

DMK | kanimozhi "நான் கொஞ்சம் விளக்கமாக சொல்லணும்"- அமித்ஷாவுடனான மீட்டிங்...கனிமொழி பரபரப்பு பேட்டி