தமிழ்நாடு

"ஒரு லட்சம் இளைஞர்கள்.. நான் சொன்னதுக்கு நல்ல வரவேற்பு" பிரதமர் மோடி பெருமிதம்

தந்தி டிவி

"ஒரு லட்சம் இளைஞர்கள்.. நான் சொன்னதுக்கு நல்ல வரவேற்பு" பிரதமர் மோடி பெருமிதம்

ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற முழக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வாணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 23ல் சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவுக்கூர்ந்தார். சுதந்திர தின உரையில், அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியதை உரையில் மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வமாக இருப்பதை இது உணர்த்துவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் சமஸ்கிருத மொழியில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் நடப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த மாதம் ஊட்டச்சத்து மாதம் என்பதால், மக்கள் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்