தமிழ்நாடு

5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்ட பணிகளை பிரதமர் நரேந்திரமோடி,இன்று துவங்கி வைக்கிறார்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான 116 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை, நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

தந்தி டிவி
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான 116 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை, நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல், தேசிய நெடுஞ்சாலை எண் 4 இல் காரைப்பேட்டை- வாலாஜாபேட்டை பிரிவை 6 வழிச்சாலையாக்கவும், நெஞ்சாலை எண் 234ஐ மேம்படுத்தவும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள அவினாசி-திருப்பூர்-அவினாசிப்பாளையம் பிரிவு நெடுஞ்சாலையை, பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும், மின்மயமாக்கப்பட்டுள்ள ஈரோடு - திருச்சி, சேலம் - திண்டுக்கல் ரயில் பாதைகளை அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.சென்னை எண்ணூரில் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திரவ இயற்கை எரிவாயு முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர், சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலையை காணொலி மூலம் திறந்துவைக்கிறார். பின்னர், ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு