உயிருக்கு ஆபத்தில்லா கலவரத்தடுப்புக்கான நவீன ரக துப்பாக்கியை கும்பகோணத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் சரவணன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணன், உக்ரைனில் பொறியியல் பயின்றுள்ளார். அங்கேயே பணியமரமால் தாய்நாடு திரும்பிய அவர், துப்பாக்கிச் சூட்டில் மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் உயிர்கொல்லா நவீனரக துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். இலக்கை தாக்குவதில் வச்சக்குறி தப்பாது என்று கூறும் இளம் பொறியாளர் சரவணன், வெறும் 4 துப்பாக்கிகள் மூலம் ஆயிரம் பேர் திரண்ட கலவரத்தை கட்டுப்படுத்த முடியும் என்கிறார். இதன்மூலம், அடி பலமாக இருக்கும், உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறும் அவர், இந்தத் துப்பாக்கியை கும்பகோணம் காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியுள்ளார்.