தமிழ்நாடு

மோசடியில் தலைதூக்கும் MLM - போலீசை அதிர வைத்த பெண்ணின் ஆடியோகொடுத்தது 1 கோடி..ஆனால் கிடைத்தது.?

தந்தி டிவி

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரிடம் பாலகுமரன் என்பவர் அறிமுகமாகி, தன்னிடம் முதலீடு செய்தால் அதிக லாப‌ம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பாலமுருகனும் அவரது நண்பர்களும், பணத்தை முதலீடு செய்துள்ளனர். முதல் 6 மாதங்கள் முறையாக வட்டியை பாலகுமரன் கொடுத்த‌தால், மேலும் பலர் ஒரு கோடிக்கும் மேல் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் பாலகுமரன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பாலமுருகன் உள்ளிட்டோர் விசாரித்துள்ளனர். அப்போது, பாலமுருகன் எம்.எல்.எம். நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த‌தும், பலரிடம் 7 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருவது தெரிந்த‌தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோவுடன் சேர்த்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலமுருகன் புகார் அளித்துள்ளார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்