Dharapuram By Election | Sathyabama | TVK | Sunil Anand | தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து MLA சுனில் ஆனந்த் வாக்கு சேகரிப்பு
#dharapuram #byelection #sathyabama #tvk #sunilanand #thanthitv
தாராபுரம் இடைத்தேர்தல்... எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் வாக்கு சேகரிப்பு தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றி கழக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தாராபுரம் தொகுதி தமிழக வெற்றி கழக பொறுப்பாளருமான என். சுனில் ஆனந்த், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாராபுரம் வடக்கு ஒன்றியம், நல்லாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரட்டார வலசு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.