தமிழ்நாடு

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரி திறந்த நிலையில், அடையாற்றில் கரைகளின் உயரம் வரை தண்ணீர் ஓடுகிறது. மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், அந்தப் பகுதிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அடையாறு பாலத்தில் நின்று தண்ணீரின் வேகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, திடீர் நகர், எம்.ஜி.ஆர் நகர், சூளைபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்ற ஸ்டாலின், வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு கோரைப் பாய், ஆடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஸ்டாலினுடன் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்