தமிழ்நாடு

முதல்வரின் இ-மெயிலுக்கு அதிர்ச்சி மெயில்.. டிஜிபி பெயரில்... அதிர்ந்த தலைமை செயலகம்... அம்பலமான பகீர் பின்னணி...

தந்தி டிவி

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக மர்மநபர்கள் இவ்வாறு மிரட்டல் விடுத்து வருகின்றனர். மிரட்டல் விடுக்கும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு டிஜிபி பெயரில் போலியான ஒரு இ மெயிலை உருவாக்கி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கு ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள ராணுவ பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் தலைமைச் செயலகத்திற்கும் வெடி குண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி மர்மநபர் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டல் தமிழக முதல்வரின் இ.மெயிலுக்கு அனுப்ப பட்டிருப்பது தெரியவர, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா