பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.