தமிழ்நாடு

டெல்லி புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்

டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் குமாரசாமியிடம் மேகதாது குறித்து விவாதிக்க இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் குமாரசாமியிடம் மேகதாது குறித்து விவாதிக்க இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ஸ்டாலின் இன்று அதிகாலை, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 16-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் வழங்க இருப்பதாக தெரிவித்தார். சோனியா காந்தி மற்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திக்கும் போது மேகதாது விவகாரம் குறித்து பேச இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என கூறிய ஸ்டாலின், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு