குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், மக்களை பிளவு படுத்தும் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்து துரோகம் செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்.