தமிழ்நாடு

"கே.பி.பி சாமியின் இழப்பு மீனவ சமுதாயத்தின் இழப்பு" - கே.பி.பி. சாமி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சென்னை திருவொற்றியூரில், உடல்நலக்குறைவு காரணமாக காலமான திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமியின் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில், உடல்நலக்குறைவு காரணமாக காலமான திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமியின் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல், சென்னை திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் அ​ஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், கே.பி.பி சாமியின் இழப்பு, திமுகவிற்கு மட்டுமல்ல, மீனவர் சமுதாயத்திற்கான இழப்பு என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்