மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.