அண்ணா அறிவாலயத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திய பின்னர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தி.மு.க. வெற்றியை தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் இருப்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.