தமிழ்நாடு

"என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொரட்டூர் ஊராட்சி சார்பில் புதுச்சத்திரத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் தான் துணை முதல்வராக இருந்த போது கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன் என்றார். அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என்ற அவர், விவசாயிகளின் நிலைமை

தற்போது மோசமாக உள்ளது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்