தமிழ்நாடு

"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

கடலூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரமேசை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு சமாதி அமைப்பதை எதிர்த்து தி.மு.க. வழக்கு தொடர்ந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருவது பொய் என்றார். சமாதி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. உடன் தான், தற்போது அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதேபோன்று கருணாநிதி சமாதிக்கு இடம் வழங்கியது தாங்கள் தான் என முதலமைச்சர் பழனிசாமி கூறி வருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின், மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இடம் ஒதுக்கியது உயர்நீதிமன்றம் தான் என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அன்று மெரினாவில் இடம் வழங்காவிட்டால் கருணாநிதி உடலை, அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகனாக மாற்றியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்