மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி உறுப்பினரை அரசு மாற்றியது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை இந்த கமிட்டிக்கு பரிந்துரைத்திருக்காமல் , மருந்துகள் கொள்முதலுக்குப் பொறுப்பாக இருக்கும் உமாநாத்தை பரிந்துரைத்திருப்பது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.