தமிழ்நாடு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கு : தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக அப்போதைய ஆட்சியர் சுப்பிரமணியன், நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"அரசியல் உள்நோக்கத்துடன் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்