சென்னை கே.கே.நகரில் இருசக்கர வாகனம் மோதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், த.வெ.க. தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையாவின் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கே.கே.நகர் சௌந்தரபாண்டியன் தெருவில் இசக்கி சுப்பையாவின் ஓட்டுநர் முகம்மது ரியாஸ், வீட்டிற்கு வெளியே வந்தபோது அவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக மோதியது. இதில் தலையின் பின்பகுதி மற்றும் முதுகில் காயமடைந்த ரியாஸ், வடபழனி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு இருசக்கர வாகனம் எப்படி கிடைத்தது என்பது குறித்து பெற்றோரிடமும் விசாரணை நடைபெறுகிறது.
#EsakkiSubbiah #thanthitv