Kallakurichi | Accident | பைக் மீது கொடூரமாக மோதிய மினிவேன் - ஸ்பாட்டிலேயே உயிரிழந்த இளைஞர்கள்
#kallakurichi #accident #thanthitv
தியாகதுருகம் அருகே கோர விபத்து - ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் ராவுத்தர் மற்றும் அன்பரசன் ஆகியோர் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் சித்தலூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது பானையங்கால் அருகே சென்றபோது, மினிவேன , இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் ராவுத்தர் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.