* இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை , விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பயணிப்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நாளை முதல் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்பதால், தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* வெளிமாநில தொழிலாளர்கள் யாரும், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் அந்தந்த மாநிலங்களுக்குள் பயணிப்பவர்கள், பேருந்தில் சென்றால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
* மேலும், பயன்படுத்தப்படும் பேருந்துகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல் படி கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
* தொழிலாளர்களை வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படும் போது, தண்ணீர், உணவு உள்ளிட்டவைகளை சம்பந்தபட்டவர்கள் ஏற்பாடு செய்யதுத்தரவேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.