தமிழ்நாடு

சின்னதம்பியை பார்க்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை...

காட்டு யானை என்பதால் யாரும் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காட்டு யானை என்பதால் யாரும் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை பார்வையிட கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது திடீரென அமைச்சர் இருக்கும் இடம் நோக்கி சின்னதம்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் சின்னதம்பியை கொண்டு செல்வதில் தொய்வு உள்ளதாகவும் இருப்பினும் வரும் 11 ம்தேதிக்குள் இறுதியான தீர்வு எடுக்கப்படும் என்றார். அமைதியான யானை என்றாலும் காட்டுயானை என்பதை பொதுமக்கள் கருத்தில் கொண்டு தள்ளி நின்று பார்க்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்